நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி..!
| | | | |

நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி..!

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz)  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து…

கனடாவில் இளையோர் மத்தியில் பரவும் புற்றுநோய்..!
| | | | |

கனடாவில் இளையோர் மத்தியில் பரவும் புற்றுநோய்..!

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் புற்றுநோய்த் தாக்கத்தினால் மரணிப்பவர்களில் சுமார் 11 வீதமான மரணங்கள் பெருங்குடல் புற்று நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களை விட, 50 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியிலேயே இப்புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கனடாவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும், ஆண்களில் 16 பேரில் ஒருவருக்கும் இவ்வாறு பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய்…

வீட்டோடு எரிந்த 8 இலட்சம் ரூபா ..!
| | | |

வீட்டோடு எரிந்த 8 இலட்சம் ரூபா ..!

யாழ். புத்தூர் மேற்கு கலைமதிப் பகுதியில் உள்ள நேற்று(26) இரவு 8.30 மணியளவில்  வீடொன்று  தீப்பிடித்து எரிந்து சேதமானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் யாரும் இல்லாத நேரம் தீப்பரவல் இடம்பெற்றதாகவும், அன்றாடம் கூலி வேலை செய்து காணி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 8 இலட்சம் ரூபா பணமும் தீயில் எரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்  சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் முற்று முழுதாக…

பெண் உறுப்பினர்களால் நிரம்பவுள்ள நாடாளுமன்றம்..!
| | | | |

பெண் உறுப்பினர்களால் நிரம்பவுள்ள நாடாளுமன்றம்..!

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமது கட்சியின் வேட்பாளர்களாக  ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் கொண்டுள்ள அரசாங்கம் மேடைகளில் ஆரம்பம் முதல் இறுதி…

மூடப்படும் அபாயத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்..!
| | | |

மூடப்படும் அபாயத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்..!

ஸ்ரீலங்கன் விமான சேவையை இயக்க முடியாத பட்சத்தில் அதனை மூட வேண்டிய நிலை ஏற்படும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் விமான நிலையத்தை கொள்வனவு செய்ய அதானி நிறுவனம் மட்டுமன்றி சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் காத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நிறுவனம் அதன் அங்கீகாரத்தை இழந்துள்ளதுடன், அதனை இலவசமாக வழங்கினாலும்…

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச..!
| | | | |

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச..!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் நாமலை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு உள்ளூராட்சி பிரதிநிதிகள் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்.பி சட்டத்தரணி சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டாரகோட்டேகொட, இந்திக்க அனுருத்த, ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, ரோஹன திஸாநாயக்க…

ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும்..!
| | | | |

ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும்..!

ஜனாதிபதியாக நீடிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப வேறு யாரும் இல்லை. அதுதான் உண்மை, அதனால், அடுத்த தேர்தலை ஓரு வருடத்திற்கு தள்ளி வைத்து, நாட்டை மீட்டுக் கொண்டுவருவதற்கு அவருக்கு மீண்டும்  காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும்…

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு..!
| | | |

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு..!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று காலை (27) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ஹோட்டலின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கைது..!
| | | |

 களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கைது..!

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பிலே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட முற்பட்ட போதே இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை  மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமானத்துக்குள் எலி! – 3 நாட்களாக தேடல்..!
| | | |

விமானத்துக்குள் எலி! – 3 நாட்களாக தேடல்..!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் எலியொன்று புகுந்து கொண்டதனால் அதனை கண்டுபிடிக்க மூன்று நாட்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்திலே இவ்வாறு எலி புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் எலியொன்று புகுந்துள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்ததனைத் தொடர்ந்து இந்த எலியை கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்கள் சென்றதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் எலியுடன் கடந்த 22ம் திகதி நாடு திரும்பியதாகவும் மூன்று நாள் முயற்சியின் பின்னர்…