TIN  இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்..!
| | | |

TIN இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்..!

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம்  வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும்,ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் எனவும், உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக நாளை(01) முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு   வெளியான அதிர்ச்சி தகவல்
| | | | |

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். அத்துடன் டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையிலிருந்து வட்டி வருமானம், வாடகை வருமானம்…