இலங்கை ஆப்கானுக்கு எதிரான தொடரின் அட்டவணை வெளியானது
| | | | |

இலங்கை ஆப்கானுக்கு எதிரான தொடரின் அட்டவணை வெளியானது

இந்தியாவில் நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான T20 தொடருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக மூன்று வகையான போட்டி தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இத்  தொடர்களுக்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய முதலாவதாக இரு அணிகளும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் தொடங்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, பெப்ரவரி 09, 11, 14 ஆம் திகதிகளில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள்…

தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து
| | | | | |

தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறும் T20 தொடரின் 4 ஆவது போட்டி நேற்றைய தினம் பிரையன் லாரா மைதானதில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்றது. ஃபில் சால்ட் அதிரடியாக துடுப்பெடுத்தாடி…

தொடரின் முதல் போட்டியை வென்றது இந்தியா
| | | | |

தொடரின் முதல் போட்டியை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றனர். அணி சார்பாக ஜோஸ் இங்லிஸ் 110 ஓட்டங்களை அதிக பட்சமாக…