2024 சாதாரண தர பரீட்சை மே மாதத்தில்
| | |

2024 சாதாரண தர பரீட்சை மே மாதத்தில்

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண தர) பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நேற்று (27) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சை பெறுபேறுகள் குறித்து கூறிய அவர், இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.