பணம் பறிபோகும் ஆபத்து மக்களுக்கு எச்சரிக்கை..!
| | | |

பணம் பறிபோகும் ஆபத்து மக்களுக்கு எச்சரிக்கை..!

நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்கு  தவறான வழிகளை பயன்படுத்துவதால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசரகாலத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. தற்போது Meta, Messenger என அழைக்கப்படும் Facebook போன்ற சமூக ஊடக தளங்களில், பிரமிட் திட்டங்களுக்கு மக்கள் பணத்தை வைப்பிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு…

இலங்கையில் முகநூல் தொடர்பில் 30 ஆயிரத்துக்கும் அதிக முறைப்பாடுகள்..!
| | | |

இலங்கையில் முகநூல் தொடர்பில் 30 ஆயிரத்துக்கும் அதிக முறைப்பாடுகள்..!

இலங்கையில் முகநூல் குற்றங்கள் தொடர்பில் 2023ம் ஆண்டில் 31,548 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பாதுகாப்பு பொறியியலாளர் சாருக அமுனுபொல இதனை தெரிவித்துள்ளார். இம்முறைப்பாடுகளில் அதிகளவானவை முகநூல் ஊடாக பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் தொடர்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான 10,774 முறைப்பாடுகள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதுடன், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 5,188 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியின்றி முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் 7,499 முறைப்பாடுகளும், நிதி…