தொலைக்காட்சி நிலையத்தை முடக்கிய ஆயுததாரிகள்
| | | |

தொலைக்காட்சி நிலையத்தை முடக்கிய ஆயுததாரிகள்

ஈக்வடரின் மிகப்பெரிய நகரமான குவாயாகுவில் உள்ள  தொலைக்காட்சி நிலையமொன்றை நேற்றைய தினம் (09)நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியொன்று நடைபெற்று கொண்டிருந்த வேளையில்  ஆயுதமேந்திய குழுவொன்று  தாக்கியுள்ளதுடன் ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்களையும், அதில் கலந்து கொண்டவர்களையும் குறித்த குழுவினர் மிரட்டுவதும், துப்பாக்கியை காட்டி மிரட்டி பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொள்வதும் தொலைக்காட்சியில் 15 நிமிடங்கள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஈக்வடர் நாட்டில் உள்ள மிகப்பெரிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில்…