இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!
| | | | |

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்துடன் இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளதுடன் பொருளாதார நடவடிக்கைகள் மீட்டெடுக்கப்படுகின்றன….

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை
| | | |

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியேற்பட்டுள்ளது. இதன் படி, இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான தங்கத்தின் விலைகளை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை பவுணொன்றிற்கு 174,350 ரூபாவாகவும் ஒரு கிராமின் விலை 21,790 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,800 ரூபாவாகவும் பவுணொன்றின் விலை…

வட்டி விகிதங்களை குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்
| | |

வட்டி விகிதங்களை குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், வழக்கமான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை 9 சதவீதம் மற்றும் 10 சதவீதமாகக் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நாணயக் கொள்கைச் சபை தனது இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை நேற்று (23) நடத்திய போது எடுக்கப்பட்டது.