மின்சார சபை ஊழியர்களுக்கு பணி இடைநீக்கம்
| | |

மின்சார சபை ஊழியர்களுக்கு பணி இடைநீக்கம்

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் தொடர்பில் மின்சார ஊழியர்கள் சிலர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைவாகவ குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பண கவுண்டரை மூடி மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15 பண கவுண்டர்கள் (cash counters) பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும் மின்சார சபையை தனியார் மயமாக்கப்…

 தொடரும்  மின்சார சபை ஊழியர் போராட்டம்
| | | |

 தொடரும்  மின்சார சபை ஊழியர் போராட்டம்

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வது மற்றும் அதனை தனியார் மயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து     கொழும்பில்  மூன்றாவது நாளாகத் தொடர்ந்தும் இன்று (05)   பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், தற்போது நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான  ஊழியர்கள் தொடருந்துகளில் போராட்டக் களத்தை நோக்கி வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும்,…

பெப்ரவரியில்  மின்கட்டணம் குறைக்கப்படும் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
| | | |

பெப்ரவரியில்  மின்கட்டணம் குறைக்கப்படும் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெறுமதிசேர் (வற் )வரி மின்கட்டணத்துக்கு தாக்கம் செலுத்தாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்தார். தொடர்ந்தும் அவர்  கூறுகையில், மின்கட்டணத்திருத்தம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நீர்மின்னுற்பத்தி, நிலக்கரி மற்றும் எரிவாயுவுடனான மின்னுற்பத்தி மற்றும் அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம் கோரியுள்ளோம். எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சகல தரவுகளையும் வழங்குவதாக மின்சார சபை…

மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு..!
| |

மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு..!

கடந்த 10 மாதங்களில் 544,488 மின் துண்டிப்புக்களும் மின் இணைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை 50 இலட்சம் மின் பாவணையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை வழங்குவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்ட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், மின்சாரம் பயன்படுத்திய ஒரு மாதத்தின் பின்னரே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த  தவரும் பட்சத்தில் சிவப்பு பட்டியல் வழங்கப்படும். சிவப்பு பட்டியல் வழங்கப்பட்ட…