புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு : 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை
| | | |

புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு : 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை

நேற்றைய தினம்(10) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால்  பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. அச் சட்ட மூலத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின்படி,  இருபது ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலையிலோ அல்லது பொது இடத்திலோ மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் தொடர்புடைய குற்றத்திற்காக மேல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளம்…

திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் – ரிஷாட்
| | | |

திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் – ரிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்  “ தற்போது நாட்டில் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பொருட்களுடைய விலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மிகவும் பாரதூரமான கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வற் வரியினால்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன?
| | | |

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன?

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஐக்கியமக்கள் சக்தி கட்சியானது ஆராயவுள்ளது. இது தொடர்பான கட்சியின்கூட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான  ரஞ்சித் மத்துமபண்டார பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் இச் சட்ட திருத்தங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என தீர்மானிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆராய்வதற்கான…