எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விபத்து
| | | |

எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விபத்து

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதேவேளை பாலம் இடிந்ததால் பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாகவும் இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியத்த, தங்காலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு…