இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி
| | | |

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் துணை தலைவர் உயிரிழந்தார். இச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவ நிலையங்கள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இவ் வேளையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது இஸ்ரேலின் போர் விமானம் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் தெற்கு…

இஸ்ரேலில் ஆளில்லா விமானத் தாக்குதல் – ஹமாசின் பிரதி தலைவர் பலி..!
| | | |

இஸ்ரேலில் ஆளில்லா விமானத் தாக்குதல் – ஹமாசின் பிரதி தலைவர் பலி..!

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதி தலைவரான சலே அல் அரூரி கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் குறைந்தது 05 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பு செவ்வாய்க்கிழமை மாலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றமானது மேலும் அதிகரித்துள்ளது. ஹமாசின் பிரதி தலைவர் அதன் இராணுவப்பிரிவில் முக்கியமானவராகவும் ஹமாசிற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் முக்கிய தொடர்பாளராகவும் காணப்பட்டமை குயிப்பிடத்தக்கது. இத் தாக்குதல் ஹமாசிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்திலும் தொடரும் யுத்தம்
| | | |

புதுவருடத்திலும் தொடரும் யுத்தம்

மத்திய காசாவிலுள்ள மகாஸி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக நேற்றைய தினம்(01) மாத்திரம் 156 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகம் முழுவதும் மக்கள் புதுவருடத்தை கொண்டாடும் தருணத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பொதுமக்கள் கொள்ளப்படுவது வருத்தமளிப்பதாக சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் பல மாதங்களுக்கு போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்….