பலஸ்தீன தாக்குதல்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்
| | | |

பலஸ்தீன தாக்குதல்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்

இரு பலஸ்தீன தாக்குதல்தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஜெரூசலத்திற்கான நுழைவாயிலில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வாகனத்தில் வந்த துப்பாக்கிதாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாகவும் கிழக்கு ஜெரூசலத்தைச் சேர்ந்த இரு தாக்குதல்தாரிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்ததுடன்…

மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்தம்
| | | |

மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்தம்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிற்கு இடையிலான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதன் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்படுகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (29) இரவு மேலும் 16 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ள ஹமாஸ் மோதல் இடைநிறுத்த நீடிப்பை உறுதி செய்துள்ளது. இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் புதன்கிழமை (29) இஸ்ரேலிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்தம் – கட்டார் அறிவிப்பு
| | | |

இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்தம் – கட்டார் அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீடிப்பதற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளன. நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட்டு முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்று வயது சிறுவன் உட்பட 11 பணயக்கைதிகளையும் சேர்த்து ஹமாஸ் 50 பணயக்கைதிகளையும் விடுதலை செய்துள்ளது. இதேவேளை, 30 சிறுவர்கள் மூன்று பெண்கள் உட்பட 33 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பாடு
| | |

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பாடு

காசா மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த உடன்பட்டு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு பதிலாக ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் 4 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துங்கள் : ஈரான் ஜானாதிபதி
| |

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துங்கள் : ஈரான் ஜானாதிபதி

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக தலையிட்டு பலஸ்தீன மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஜனாதிபதி ரைசி, இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசி அழைப்பில் கலந்துரையாடும் போதே பின்வருமாறு கூரினார். தற்போது ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதல்களால் காசாவில் 10,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நெருக்கடியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது எனவும், யூத இஸ்ரேல்…

காசாவை இரண்டாகபிரித்த இஸ்ரேல் :டேனியல் ஹகாரி
| |

காசாவை இரண்டாகபிரித்த இஸ்ரேல் :டேனியல் ஹகாரி

காசா மீது இஸ்ரேல் நடத்தும் தீவிர குண்டு தாக்குதலினால் இஸ்ரேலிய படைகள் ‘காசா நகரை சுற்றி வளைத்துள்ளன. இதன் காரணமாக தற்போது தெற்கு மற்றும் வடக்கு காசா என இரண்டாக பிரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் போராளிகளை ஒட்டு மொத்தமாக ஒழிப்போம் என்ற குறிக்கோலுடன் இஸ்ரேல் போரை தொடர்கின்றது. காசாவில்…