காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
| | | | |

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்திருந்தது. இதே சம்பவத்தில் ஜாபர் பட்டாலியனின் மேலும் ஏழு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. செவ்வாயன்று காசா நகரின் ஜெய்டவுன் சுற்றுப்புறத்தில் கண்ணி வெடி வெடித்ததில் ஷஹர் மற்றும் சீஃப் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு வீரர்கள் காயமடைந்தனர். இதன்படி ஹமாஸுக்கு எதிரான தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேல் படையினரின் எண்ணிக்கை242 ஆக உயர்ந்துள்ளது.