மாணிக்கக்கற்களுடன் சிக்கிய தேரர் உட்பட இருவர் கைது..!
| | | |

மாணிக்கக்கற்களுடன் சிக்கிய தேரர் உட்பட இருவர் கைது..!

வெலிவேரிய  பிரதேசத்தைச் சேர்ந்த  தேரர் ஒருவர் உட்பட இருவர்  37 கோடி ரூபா மதிப்புள்ள  2 நீல மாணிக்கக்கற்களை  சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய இருந்த  நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட  சுற்றிவளைப்பிலே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்கள் விகாரை வடிவில் அமைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.