கனடாவில் கொவிட்  தொற்றாளர்கள்  அதிகரிப்பு !
| | |

கனடாவில் கொவிட்  தொற்றாளர்கள் அதிகரிப்பு !

கனடாவின் ஒட்டாவாவில் கொவிட் நோயார்களின் அனுமதிகள் அதிகரித்துள்ளதாக கொவிட் நோயாளர்களுக்கான வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய்த் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் இதனால் அவர்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது