யாழில். தறையிறங்காமல் திரும்பிய விமானம்..!
| | | | |

யாழில். தறையிறங்காமல் திரும்பிய விமானம்..!

சென்னையில் இருந்து இன்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாத நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிஆவினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திலும் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானமே இவ்வாறு தரையிறக்க முடியாமல் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது.

நாட்டில் அதிகரிக்கும் மழை நிலை
| | | | |

நாட்டில் அதிகரிக்கும் மழை நிலை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு அருகில் விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும், வடக்கு,…

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் மழையுடனான வானிலை
| | | | |

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார். கிழக்கு, ஊவா,…

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை
| | | |

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…