வவுனியாவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி..!
| | | |

வவுனியாவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி..!

நேற்று மாலை வவுனியா ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில்  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தானது டிப்பர்வாகனமும் கப்வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 7.00மணியளவில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.