இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!
| | | |

இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.