மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 8 பேர் கைது..!
| | | |

 மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 8 பேர் கைது..!

பாடசாலைகளுக்கு அருகில் கடைகளை நடத்தி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த  8 கடை உரிமையாளர்களை ஹிக்கடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைக்கு அருகிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ காவல் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சதகிரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் 17 வயதுடைய முகவர் ஒருவரை சிகரெட் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்டே  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்….