ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் திடீர் மரணம்
| | | |

ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் திடீர் மரணம்

விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்த  ரஸ்ய எதிர்கட்சி தலைர் அலெக்சே நவல்னி நேற்றைய தினம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 47 வயதுடையவர் எனவும்  திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் எனவும் ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையிலலே   இவ்வாறு  உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஆளில்லா விமானம்
| | | | |

உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஆளில்லா விமானம்

ரஷ்யாவானது  உக்ரைன்மீது மிகப்பெரிய வான் தாக்குதலை நேற்றைய தினம் {29}  மேற்கொண்டிருந்தது. உக்ரைன் ரஷ்யா போரிலே இதுவே மிகப்பெரிய ரஷ்ய  வான்தாக்குதலென உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட  ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக உக்ரைன் தலைநகர் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.