அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது பாரத் லங்கா வீட்டுத்திட்டம்!
| | | |

அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது பாரத் லங்கா வீட்டுத்திட்டம்!

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் மலையகத்துக்கான 10,000 வீடுகளைக் கொண்ட பாரத் லங்கா வீட்டுத்திட்டம்  இன்றைய தினம் (19) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இணைந்துக் கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 1,300 வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெற்றது. மேலும் இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல்…

ரணிலுக்கு குவியும் ஆதரவு..!
| | | | |

ரணிலுக்கு குவியும் ஆதரவு..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த போது நாட்டைக் கைப்பற்றுவதற்கு எந்தத் தலைவரும் முன்வரவில்லை எனவும் அந்த வேளையில் ரணில் விக்ரமசிங்க முன் வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு எனவும்  பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் முடிவு அல்ல என்றும்…

சுகாதார துறையுடன் தொடர்புடைய பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..!
| | | | |

சுகாதார துறையுடன் தொடர்புடைய பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..!

சுகாதார சேவைளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  உத்தரவில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, உணவு, சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், உழைப்பு அல்லது தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்களின் வேலைநிறுத்தத்தினையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த 20 வருடங்களுக்கு  ரணிலே ஜனாதிபதி.
| | | | |

அடுத்த 20 வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றிலே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையுடன் ரணில் ஜனாதிபதி பதவியில் மீண்டும் அமர்வார் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பீடு செய்யக்கூடிய உலகத் தலைவர்கள் எவரும் இல்லை எனவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ…

அடுத்த ஜனாதிபதியாக சஜித்..!
| | | | |

அடுத்த ஜனாதிபதியாக சஜித்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினால் வெற்றிப் பெற முடியாது என்றும் அதிக வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு  கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லலாம். எனினும் அவர்கள் இருவரும் இணைவது சாத்தியமற்ற விடயம்  என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்.
| | | | |

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் நேற்றையதினம் (07)  ரணில் விக்ரமசிங்க  கொள்கைப் பிரகடன உரையுடன் ஆரம்பமானது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவரான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் சபையிலிருந்து வெளியேறியதை அவதானித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரத்த குரலில் ‘உட்கார்ந்து கேளுங்கள்’ என கூறினதுடன்  அமைதியாக இருக்குமாறு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப்…

இராஜினாமா செய்த கெஹெலிய ரம்புக்வெல்ல..!
| | | | |

இராஜினாமா செய்த கெஹெலிய ரம்புக்வெல்ல..!

சுற்றாடல் அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து (Immune Globulin) தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ஆம் திககதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். மேலும் அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…

நாடு திரும்பும் பசில்
| | | |

நாடு திரும்பும் பசில்

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவர் நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளமை  குறிப்பிடதக்கது. மேலும்  சிறிலங்கா பொதுஜன பெரமுனவிக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதென  ஊடகங்கள் செய்தி விடுத்துள்ளன. அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாகவும்…

கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது  ஜனாதிபதி தெரிவிப்பு
| | | |

கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது ஜனாதிபதி தெரிவிப்பு

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், கடந்த வருடம்  சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ​​நாம் வங்குரோத்து நாடாக முத்திரை குத்தப்பட்டிருந்தோம்ன் இருப்பினம் இவ் வருட  சுதந்திர தினத்திற்குள் அந்த நிலையிலிருந்து விடுபட்டு பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடிந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய போக்கு முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், அதே பாதையில் தொடர்ந்து செல்வதற்கு இந்த சுதந்திர தினத்தில் நாம் தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பெருமைமிக்க பணிகளுக்கு…

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் பூர்த்தி
| | | |

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் பூர்த்தி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று(04) காலிமுகத்திடலில் நடைபெற்றது. ‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார். சுதந்திர தின விழாவைப் பல்வேறு கலை நிகழ்வுகளும் முப்படைகளின் அணிவகுப்புகளும் கோலாகலமாக இடம்பெற்றன. மரியாதை அணிவகுப்பிப்பில் இராணுவத்தைப்…