ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்
| | | |

ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனமானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இவர், மேல் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரட்னவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில், நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நீண்ட காலமாக வெற்றிடம் நிலவி வந்த நிலையிலேயே…

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி
| | |

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (25) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும், இல்லையெனில் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து இந்த…

78வது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்
|

78வது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

இந்நாட்டின் 78வது வரவு செலவுத் திட்டமான 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படடது. 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட அரசாங்கச் செலவு 7,326 பில்லியன் ரூபாவாகும். தொடர்ச்சியான செலவுகள் அல்லது மானியங்கள் மற்றும் சம்பளம் போன்ற செலவுகளுக்காக 5,334 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளது. மூலதனச் செலவு அல்லது புதிய திட்டங்கள் அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான செலவு 1,225 பில்லியன்…