அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து
| | |

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும்  அரசாங்கம்…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
| | | |

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியை ஆரம்பிக்க முடியுமா? என்றும்  நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதா?, இல்லையா? என்பது தொடர்பிலும் குழு வழங்கும் அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

எரிபொருள் மற்றும் மின் கட்டணம் குறைக்கப்படும்
| | |

எரிபொருள் மற்றும் மின் கட்டணம் குறைக்கப்படும்

அடுத்து மேற்கொள்ளப்படும்  திருத்தத்தின் போது எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடளுமன்றில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றில் நடைபெற்ற வற் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்து வருவதாலும் நாட்டில் நிலவும் அதிகளவு மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளமையை கவனத்திற்…