தொடரும் மழையினால் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !
| | |

தொடரும் மழையினால் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் நிலைகொண்டிருந்த மிக்ஜான் சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கரையை ஊடறுத்துள்ளதுடன் படிப்படியாக நலிவடைகின்றதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் மேலும் கூறுகையில், மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…

வடக்கு நோக்கி நகரும் மிக்ஜம் சூறாவளி
| | | | |

வடக்கு நோக்கி நகரும் மிக்ஜம் சூறாவளி

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 520 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள மிகவும் பலமிக்க மிக்ஜம் சூறாவளியானது வட திசையினூடாக நகர்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளியானது இன்று காலை சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தென் ஆந்திரப் பிரதேசத்தை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது குறித்து மேலும் கூறிய அவர், வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மாகாணங்களில்…

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் மழையுடனான வானிலை
| | | | |

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார். கிழக்கு, ஊவா,…