இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்
| | | |

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய அதிபர் திரௌபதி முர்முவிடம்  ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இந்திய அதிபர் திரௌபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார். மேலும், இவருக்கு முன்னதாக,இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட இந்தப் பதவியை வகித்தார். கடந்த செப்டம்பரில் அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது….