இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்
| | | | |

இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உறுதிப்படுத்தியுள்ளார். ஜனவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட  திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்
| | | |

மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்

கடந்த நவம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச்சட்டமூலம், கடந்த 11 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பெறுமதி சேர்வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு உறுதிப்படுத்தினார். இதற்கமைய, இந்தச்…