2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்
| | | |

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்

கடந்த வெள்ளிகிழமை கட்டாரில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தென் கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. தென் கொரியா சார்பாக இன் பியூம் ஹ்வாங் ஒரு கோலையும், கங் இன் லீ 2 கோல்களையும் பெற்றனர். பஹ்ரை அணிக்கு அப்துல்லாஹ் அல் ஹஸாஸ் ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தார்….

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  
| | |

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை  நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளது. தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது.  அந்த சுத்த பணிக்கு  உழவு இயந்திரங்கள் மற்றும் பெகோ இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. பருவமழைக் காலங்களில் கடலுக்கு அடியில் ஓடும் நீரோட்டம் காரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்…

 சர்வதேச ரீதியில் யாழ். மாணவன் சாதனை
| |

 சர்வதேச ரீதியில் யாழ். மாணவன் சாதனை

2023ம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேந்ந்த 2,500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் இயங்கும் UCMAS கிளையில் பயிலும் மாணவனும் ஆவார். இலங்கை சார்பில் கலந்து கொண்டு Champion பட்டத்தை…

நாளை பாராளுமன்றத்தில் விசேட மாநாடு
| | | | |

நாளை பாராளுமன்றத்தில் விசேட மாநாடு

உலக அமைதியை நிலை நாட்டுவதற்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விசேட சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவையின் தலைவரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இது நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை…