இலங்கைக்கு கிடைத்துள்ள அமெரிக்க டொலர்கள்
| | | |

இலங்கைக்கு கிடைத்துள்ள அமெரிக்க டொலர்கள்

இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான நிதி ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்த கடன் வசதியை பெற்றுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதி திட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நிதித் துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த இந்த…

வட்டி விகிதங்களை குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்
| | |

வட்டி விகிதங்களை குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், வழக்கமான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை 9 சதவீதம் மற்றும் 10 சதவீதமாகக் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நாணயக் கொள்கைச் சபை தனது இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை நேற்று (23) நடத்திய போது எடுக்கப்பட்டது.