மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல் காலக்கெடு
| | | |

மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல் காலக்கெடு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்று நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வீடமைப்பு அதிகார சபை மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு, பிரதேச செயலாளர் உள்ளிட்ட திணைக்களங்கள் ஊடாக…

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை
| | | |

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை

நாட்டின் 76 வது  சுதந்திரதினத்தை  முன்னிட்டு ஜனாதிபதியின்  பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு விடுதலையாகியுள்ளனர். அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் எஸ் பிரபாகரன் தலைமையில் இன்று (04) காலை 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா சிறையில் இருந்து 13 சிறைகைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய போராட்டம்
| | | | |

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய போராட்டம்

சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் அடாவடியை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் , போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது,…

700 பில்லியன் டொலரை பதிக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள்
| | |

700 பில்லியன் டொலரை பதிக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள்

அரசு பெற்ற கடன்களுக்காக இப்பொழுது சாதாரண மக்களிடமிருந்து பணத்தை கறந்தெடுக்கும் வரி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்று (20)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் விலை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது, இது மேலும் அதிகரிக்கப்பட்டு பொருட்கள் வாங்க முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது. அரசியல்வாதிகள் சில செல்வந்த முதலைகளால் சட்டவிரோதமான முறையில்…

விஜயகாந்தின் நினைவிடத்தில் சாணக்கியன்
| | |

விஜயகாந்தின் நினைவிடத்தில் சாணக்கியன்

தென்னிந்திய நடிகர் மற்றும் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் (13.01.2024) சாணக்கியன் நேரில் சென்றுள்ளார். கோவிட் தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28ஆம் திகதி (28.12.2023) காலமானார். தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், ரசிகர்கள்…

இராணுவ உயர் அதிகாரி கைது.!
| | |

இராணுவ உயர் அதிகாரி கைது.!

மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தினால்  நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு இன்று(10) முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவ அதிகாரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தனது வரவைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்திருந்தது. கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாகவே இவ் உத்தரவு…

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை
| | | |

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் , மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

மின்சார சபை போராட்டத்திற்கு காரணம் ? அமைச்சர் கஞ்சன விஜயசேகரவா!
| | | |

மின்சார சபை போராட்டத்திற்கு காரணம் ? அமைச்சர் கஞ்சன விஜயசேகரவா!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வீதியில் போராடுவற்கு அமைச்சர் கஞ்சன விஜயசேகர அவர்களின் வெளிப்படையில்லாத் தன்மையே காரணமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர்  இவ்வாறு கூறினார். மேலும் அவர்  தெரிவிக்கையில், மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்கக் கூடாது. பெற்றோலியம் மற்றும் மின்சார சபை அமைப்புகளின் வருமானம்…

இன்றும் மழையுடனான வானிலை
| | | |

இன்றும் மழையுடனான வானிலை

 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும்…

மட்டக்களப்பில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணி பகீஸ்கரிப்பு
| | |

மட்டக்களப்பில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணி பகீஸ்கரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து  இரண்டாவது நாளாக இன்றும்   இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் பணி பகீஸ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இந்த  பணி பகிஸ்கரிப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த பணி பகீஸ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.