அரசியலுக்கு வருமாறு சனத் நிஷாந்தவின் மனைவிக்கு அழைப்பு..!
| | | | |

அரசியலுக்கு வருமாறு சனத் நிஷாந்தவின் மனைவிக்கு அழைப்பு..!

கடந்த மாதம் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை அரசியலுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அத்தோடு  சனத் நிஷாந்த தொடர்பில் சமூகத்தில் தவறான சித்தாந்தத்தை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயற்பட்டதாக…

நிறைவேற்று அதிகாரமுறை குறித்து மகிந்த கருத்து..!
| | | | | |

நிறைவேற்று அதிகாரமுறை குறித்து மகிந்த கருத்து..!

நிறைவேற்று அதிகாரமுறையை நீக்குவது சரியான நடவடிக்கை என முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன்  தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அனுபவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது. முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதால் அதனை நீக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயல்வது…

மகிந்தவின் வீட்டிற்கு  50 மில்லியன்ற்கும் அதிக பெறுமதியான  ஜெனரேட்டர்
| | | |

மகிந்தவின் வீட்டிற்கு 50 மில்லியன்ற்கும் அதிக பெறுமதியான ஜெனரேட்டர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டிற்காக 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டர்) மின்சார சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு புதிய வற் வரி சேர்க்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். ஐம்பது மில்லியனுக்கும் குறைவான மதிப்பீட்டில் அது கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின் சில முதுகெலும்பில்லாத அதிகாரிகள் அதனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த இயந்திரம் 220 கிலோவோட் திறன்…

இந்த வருடம் ஆட்சியை  கைப்பற்றுவோம்  : அனுரகுமார
| | | |

இந்த வருடம் ஆட்சியை கைப்பற்றுவோம் : அனுரகுமார

இந்த ஆண்டில்  ஏதாவது ஓர் வழியில் ஆட்சி கைப்பற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் அண்மையில்  இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தற்போதைய மோசமான ஆட்சியை தோற்கடித்து ஏதாவது வழியில் ஆட்சியை பெற்றுக்கொள்ள  தயார். மக்களை நெருக்கடியில் ஆழ்த்திய ஆட்சியாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான  போரே  நடைபெறுகின்றது. இந்தப் போரிலிருந்து மக்கள் பின்வாங்கக் கூடாது. நிச்சயமாக இந்த…

அதிபர் தேர்தலில் களமிறங்கும் நாமல் ராஜபக்ச
| | | |

அதிபர் தேர்தலில் களமிறங்கும் நாமல் ராஜபக்ச

நாட்டைப் பாதுகாக்கும் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தெரிக்கையில் , சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் எந்த தேர்தலுக்கும் நாம் தயார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பலமான அரசியல் சக்தியாக பலப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. எமது கட்சியில்  இருந்து எவரும் வெளியேறவில்லை. ஆனால் எங்களுடன் கூட்டணியில் இருந்த சில அரசியல் கட்சிகள் தங்கள்…

தேர்தலில்  மகிந்த ராஜபக்ச களமிறங்குவாரா???
| | | |

தேர்தலில்  மகிந்த ராஜபக்ச களமிறங்குவாரா???

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(04) சிறிலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத்  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் தமது கட்சி வெற்றிகரமாக எதிர்நோக்கும். தமது கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில், தேர்தல் நெருங்கும் போது அறிவிக்கப்படும். தமது…