போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் செலுத்துவதற்காக போலிஸ் ஊடகப்பிரிவு எடுத்துள்ள அதிரடி முடிவு…
| | |

போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் செலுத்துவதற்காக போலிஸ் ஊடகப்பிரிவு எடுத்துள்ள அதிரடி முடிவு…

மேல்மாகாணத்தில் போக்குவரத்து விதி மீறலுக்காண அபராதம் செலுத்துவதற்காக போலிஸ் ஊடக பிரிவானது தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்குமென தெரிவித்துள்ளது. இந்த 24 மணிநேர சேவையில், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை செலுத்துவதுடன், பொதுமக்களும் தமக்கான சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையானது பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனி வீதி, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொடை, சீதாவக்கபுர ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்த படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளனர்.