வவுனியாவில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தம்பதியின் சடலம்
| | |

வவுனியாவில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தம்பதியின் சடலம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பிரதான வீதியில் தனது மகனின் வியாபார நிலையத்திற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் வசித்து வரும் தம்பதியினரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை வியாபார நிலையத்தைத் திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தமையைக் கண்டு செட்டிகுளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்தச் சம்பவத்தில் செட்டிகுளம்…

கிளிநொச்சியில் 47 kg கஞ்சா – 44 வயதுடைய சந்தேகநபர் கைது !
| |

கிளிநொச்சியில் 47 kg கஞ்சா – 44 வயதுடைய சந்தேகநபர் கைது !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் வீடொன்றினுல் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, நேற்று (06.11.2023)இரவு சோதனை மேற்கொண்ட பொலிஸார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் , சாட்சி பொருட்களையும், சந்தேக நபரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய இரண்டு பெண்கள்-அதிகாரிகள் வைத்தியசாலையில்!
|

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய இரண்டு பெண்கள்-அதிகாரிகள் வைத்தியசாலையில்!

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையால் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். புலத்சிங்கள கீழ் வெல்கம பிரதேசத்தைச் சேர்ந்த எழுவரே கைது செய்யப்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான இரண்டு அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.