மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! – காலி
|

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! – காலி

காலி – எல்பிட்டிய, யக்குடுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். எல்பிட்டிய, யக்குடுவ பிரதேசத்தில் இளைஞர் குழு ஒன்றினால் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றிற்கு விநியோகிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, யக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த விமல் சிசிர குமார என்ற 43 வயதுடைய தச்சுத் தொழிலாளியே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.