புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு.
புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்கம்மன – வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாடசாலை முடித்து வந்த பிள்ளைகள் தந்தை வீட்டில் இல்லாத நிலையில் தேடிய போதே, இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்….