பாடசாலை மாணவி மரணம் – பலப்பிட்டியவில் சம்பவம்
பலப்பிட்டிய, மருதானை பிரதேசத்தை சேர்ந்த 13 வயதான வலிமுனி தினுஜி என்கிற பலப்பிட்டிய ரேவத கல்லூரி மாணவியே உயிரிழந்துள்ளார். சுகவயீனம் காரணமாக வீட்டில் இருந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டதன் காரணத்தால் இன்று வெள்ளிக்கிழமை (10) காலை உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் கூரியதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.