131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை

131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை

நுவரெலியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்களில் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தயாபரன் என்ற இளைஞனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். international warriors book of world records ஒழுங்கமைப்பில் உலக சாதனைக்கான டான்ஸ் இடம்பெற்றிருந்தது. அமைப்பு நடனத்தை இந்தியாவிலிருந்து இரகசிய கண்காணிப்பு கமரா மூலமாக பார்வையிட்டிருந்தது. லயன் யூட் நிமலனின் நெறியாள்கையில் சர்வதேச சட்ட நியதிகளுக்கமைவாக 6 நாட்களாக டான்ஸ் மரதன் நடைபெற்றுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு…

நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தை விற்க தீர்மானம் – ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் எடுத்த முடிவு!
| |

நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தை விற்க தீர்மானம் – ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் எடுத்த முடிவு!

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்கும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய,இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.