மசாஜ் சேவை பெறச் சென்றவர் திடீர் மரணம்..!
| | | |

மசாஜ் சேவை பெறச் சென்றவர் திடீர் மரணம்..!

தெஹிவளை – மஹரகம பிரதான வீதியில் அம்பில்லவத்தை சந்திக்கு அருகில் உள்ள  மசாஜ் நிலையமொன்றில் சேவை பெறச் சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52  வயதுடைய நபர் திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..!
| | | |

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..!

நிலவுகின்றன கடுமையான வறட்சியுடன் கூடிய வானிலை மற்றும் அதிகரித்த  நீர்ப்பாவனை போன்றவற்றினால் நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கால் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, வாதுவை மற்றும் வஸ்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கான நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் இப் பிரதேசங்களுக்கான தொடர்ச்சியான தடையற்ற நீர் வழங்கலை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது….