கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு..!
| | | |

கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு..!

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. ஆனால் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து…

சபரி மலை சென்ற யாழ். ஐயப்ப பக்தர் உயிரிழப்பு
| | |

சபரி மலை சென்ற யாழ். ஐயப்ப பக்தர் உயிரிழப்பு

சபரி மலைக்கு செல்வதற்காக  விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் நேற்றைய தினம் (11) உயிரிழந்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த வேளை திடீரென உடல்நல குறைப்பாடு ஏற்பட்டது.   அது தொடர்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது , விமானம் தரையிறங்கியதும் தயராக இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
| | |

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று (22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்….

யாழில் அச்சுவெலியில் அதிக மழை
| |

யாழில் அச்சுவெலியில் அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெய்த மழையில் அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், யாழ். நகர் பகுதியில் 35.8 மில்லி மீற்றர், வடமராட்சி அம்பனில் 34.4 மில்லி மீற்றர், தெல்லிப்பழையில் 33.3 மில்லி மீற்றர், நயினாதீவில் 29.1 மில்லி மீற்றர், சாவகச்சேரியில் 24.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மைய…

வன்முறைகளின் பின்னணியில் இரு குழுக்களே செயற்படுகின்றன
| | |

வன்முறைகளின் பின்னணியில் இரு குழுக்களே செயற்படுகின்றன

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிசாரின் கடமை எனவும் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், தெல்லிப்பழையில் இடம்பெற்ற சம்பவம் போல யாழ்ப்பாணத்தில் இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்க முடியாது. குறித்த சம்பவத்துடன்…

வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது
| |

வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது

கடந்த திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  இளைஞன் ஒருவர் மீது மர்ம கும்பல் ஒன்று  வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர் ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை – யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில்  பொதுமக்கள் மீது வாள்களை காட்டி அச்சுறுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது   வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி ஓடியுள்ளனர் . தப்பியோடிய வாகனத்தை…