இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான்
|

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான்

கட்டாரில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம்(06) அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் ஜோர்டான் மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜோர்டான் அணி வெற்றி பெற்று சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜோர்டான் அணி சார்பாக யஷான் அல் நைமட் 53 ஆவது நிமிடத்திலும் மற்றும் முசா அல் டாமரி 66…

வெளிநாட்டில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
| | | |

வெளிநாட்டில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

தென் கொரியாவில் நாசு நகரில் உள்ள இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் காலை 11.00 மணியளவில்  பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்தானது தொழிற்சாலை  மின் கசிவினால்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பணியில் இருந்த 45 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்  540 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சுமார் 200 பேர் பணிபுரிவதுடம் அதில் அதிகளவிலான இலங்கையர்களும் பணிபுரிவதாகவும்  தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள்…

ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி
| | | | |

ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் இன்றைய தினம் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கமைய இன்றைய தினம் 2 காலிறுதிப்போட்டிகளும் நாளைய தினம் 2 காலிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இன்றைய நாளின் முதலாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகள் மோதுகின்றனர். இப் போட்டி மாலை 05 மணியளவில் அஹமட் பின் அலி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும்   தென் கொரியா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப் போட்டி இன்று…

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்
| | | |

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்

கடந்த வெள்ளிகிழமை கட்டாரில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தென் கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. தென் கொரியா சார்பாக இன் பியூம் ஹ்வாங் ஒரு கோலையும், கங் இன் லீ 2 கோல்களையும் பெற்றனர். பஹ்ரை அணிக்கு அப்துல்லாஹ் அல் ஹஸாஸ் ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தார்….

தென்கொரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து
| | | |

தென்கொரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (02) தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம் செய்தபோதே இனந்தெரியாத நபரொருவரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், உடனடியாக உள்ளூர் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது கழுத்தில் சுமார் ஒரு சென்றி மீற்றர் அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும்  இத் தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.