புதையல் தோண்டிய மூவர் கைது
| | |

 புதையல் தோண்டிய மூவர் கைது

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவரை  பொலிஸார் இன்று(29) காலை கைது செய்துள்ளனர். தங்காலை பிரதேசத்தை சேர்ந்த கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தர், ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் மற்றும் மதவெல பிரதேசத்தை சேர்ந்த மேசன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தருக்கு சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு புதையல் தோண்டப்பட்டுள்ளது.