கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் ..!
| | | |

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் ..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருகோணமலையைச் சேர்ந்த 27  தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் ஆவணங்கள் பரிசோதனை செய்த போது போலியான இலங்கை கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டை பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு…

மதுபோதையில் அட்டகாசம்..!
| | | |

மதுபோதையில் அட்டகாசம்..!

திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபரொருவர், மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார். இச் சம்பவத்தில்  அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற மனைவி உயிரிழந்தததுடன், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை, வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட  அவர், கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார். அத்துடன்…

கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கரை ஒதுங்கியது..!
| | | |

கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கரை ஒதுங்கியது..!

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் நேற்று (01) மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர். அத்துடன் குறித்த நபரின் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமானதுடன் இதுவரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் சடலம் குறித்து மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் 10வது சாரணர் நிகழ்வு.
| | | | | |

திருகோணமலையில் 10வது சாரணர் நிகழ்வு.

‘மாற்றத்துக்கான தலைமைத்துவம்’என்ற தொனிப் பொருளில் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை திருகோணமலையில் பத்தாவது சாரணர் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வ சாரணர் இலச்சினை பிரதம சாரணர் ஆணையாளரிடமிருந்து நாட்டின் முதலாவது சாரணரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
| | |

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (21) மாலை வயலை பாதுகாப்பதற்காகசென்றவரை  யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 67 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவ இடத்திற்க்கு  திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டதோடு, இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல பொலிஸார் முன்னெடுத்துருந்தனர். மேலும்  இப்பகுதியில் பாதுகாப்பற்ற யானை வேலி அமைக்கப்பட்ட நிலையிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது….

திருகோணமலையில் கைதான காவல்துறை அதிகாரி
| | |

திருகோணமலையில் கைதான காவல்துறை அதிகாரி

ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ். கோப்பாய் காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம்(11) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்தார். இதன்போதே அவர்  திருகோணமலை  பகுதிக்கு சென்று போதைப்பொருளினை கைமாற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  
| | |

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை  நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளது. தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது.  அந்த சுத்த பணிக்கு  உழவு இயந்திரங்கள் மற்றும் பெகோ இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. பருவமழைக் காலங்களில் கடலுக்கு அடியில் ஓடும் நீரோட்டம் காரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்…

திருகோணமலையில் இடம்பெற்ற  கலாச்சாரப் பொங்கல் திருவிழா
| | |

திருகோணமலையில் இடம்பெற்ற  கலாச்சாரப் பொங்கல் திருவிழா

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பொங்கலை வரவேற்கும் முகமாக கடந்த சில தினங்களாக  திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன. குறிப்ப்பாக இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைப்பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம்(08) 1008 பொங்கல் பானைகள் , 1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன்    கலாச்சாரப் பொங்கல் திருவிழா  வெகு விமர்சையாக நடைப்பெற்றது. தமிழர் பாரம்பரியத்தை கட்டியெலுப்பும் செயட்பாடுகளை  மேற்கொண்டு…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
| | |

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று (22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்….

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு
| | |

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.