இலவச வீசா திட்டம்..!
|

இலவச வீசா திட்டம்..!

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில்  குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் தம்பதி..!
| | | |

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் தம்பதி..!

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று(25) பிற்பகல் 04.35 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இத் தம்பதியினர் காற்று நுழையும் வகையிலான பெட்டிகளில் தவளை, மீன், குளவி, அணில், ஆமை, பல்லி, எலி,…

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:
| | | | | |

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவும் கோரிக்கைக்கு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று தென்கொரிய தமிழ்ச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று கொரியாவில் வசிக்கும் பல்லின சமூக குடும்பங்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஸ்யா, சீனா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாட்டை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்விற்கு தலைமை வகித்த கொரிய ஜனாதிபதியின் சமூக…

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் பூர்த்தி
| | | |

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் பூர்த்தி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று(04) காலிமுகத்திடலில் நடைபெற்றது. ‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார். சுதந்திர தின விழாவைப் பல்வேறு கலை நிகழ்வுகளும் முப்படைகளின் அணிவகுப்புகளும் கோலாகலமாக இடம்பெற்றன. மரியாதை அணிவகுப்பிப்பில் இராணுவத்தைப்…

சமநிலையில் முடிவடைந்த தாய்லாந்து-ஓமான் போட்டி
| | | | |

சமநிலையில் முடிவடைந்த தாய்லாந்து-ஓமான் போட்டி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (21) F குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் முதலாவது போட்டியில் தாய்லாந்து மற்றும் ஓமான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இரு அணிகளும் இந்தவொரு கோல்களும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ஓமான் அணி அடுத்த போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை கிர்கிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இன்றைய தினம் நடைபெறவுள்ள A குழுவின் முதலாவது போட்டியில் கட்டார் மற்றும் சீனா ஆகிய அணிகள்…

வெற்றி பெற்றது சவுதி அரேபியா அணி
| | | | |

வெற்றி பெற்றது சவுதி அரேபியா அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (21)  F குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சவுதி அரேபியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. சவுதி அரேபியா அணி சார்பாக மொஹமெட் கன்னோ 35 ஆவது நிமிடத்திலும் ஃபைசெல் அல் கம்டி 84 ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோலை பெற்றனர். அத்துடன் கிர்கிஸ்தான்…

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்
| | | |

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்

கடந்த வெள்ளிகிழமை கட்டாரில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தென் கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. தென் கொரியா சார்பாக இன் பியூம் ஹ்வாங் ஒரு கோலையும், கங் இன் லீ 2 கோல்களையும் பெற்றனர். பஹ்ரை அணிக்கு அப்துல்லாஹ் அல் ஹஸாஸ் ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தார்….

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  
| | |

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை  நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளது. தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது.  அந்த சுத்த பணிக்கு  உழவு இயந்திரங்கள் மற்றும் பெகோ இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. பருவமழைக் காலங்களில் கடலுக்கு அடியில் ஓடும் நீரோட்டம் காரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்…

மியன்மாரில் பணயக்கைதியான  இலங்கையர்கள்
| | | | |

மியன்மாரில் பணயக்கைதியான இலங்கையர்கள்

மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மியன்மார் உள்துறை அமைச்சரின் இணக்கப்பாட்டை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார். மியன்மாரின் ,  தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற இடத்தில் இலங்கையின் 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக இலங்கைத்தூதரகம் பல்வேறு…