வீரப்பன் மகள் போட்டி : நாம் தமிழர் அறிவிப்பு..!
| | | | |

வீரப்பன் மகள் போட்டி : நாம் தமிழர் அறிவிப்பு..!

இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக…

35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்.!
| | | | |

35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்.!

தமிழ்நாட்டின் ஈரோடில் உள்ள தனியார் கோயிலொன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அதாவது மகாசிவராத்திரயின் போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம் பூசைய்யன் கோயிலில் அந்த எலுமிச்சை உள்ளிட்ட மேலும் சில பொருள்கள் சிவனுக்கு படைக்கப்பட்டது. சுமார் 15 பக்தர்கள் ஏலத்தில் கலந்துகொண்டனர். கடைசியில் ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அதனை ஏலத்தில் எடுத்துள்ளார். ஏலத்தில் வெற்றிபெறுபவர் செல்வச் செழிப்புடன் வாழ்வார் என்பது அந்தக் கிராம மக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை
| | | | |

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில்   பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை  பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால்…