நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தை விற்க தீர்மானம் – ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் எடுத்த முடிவு!
| |

நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தை விற்க தீர்மானம் – ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் எடுத்த முடிவு!

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்கும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய,இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.