மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து-முல்லைத்தீவில் சம்பவம்

மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து-முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு புதன்வயல் சந்தியில் நேற்று முன்தினம் (16) மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குமுழமுனையில் இருந்து தண்ணீரூற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மாஞ்சோலையிலிருந்து குமுழமுனை வீதிக்கு நுழைந்த உழவு இயந்திரமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்களில் ஒருவர் படு காயங்களுக்குள்ளானதோடு அவர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். மழைக்காலம் என்பதால் உழவு இயந்திர சாரதி முன்னெச்சரிக்கை இல்லாது வீதிக்குள் நுழைய முற்பட்டதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….