அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி..!
| | | | |

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி..!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள வீடொன்றில் நேற்று (12) காலை வயதான தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இருவரும் இலங்கை பூர்வீகமாக கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும்  80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் ஆகிய இருவரை விக்டோரியா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.