ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!
| | | | |

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயல்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இலங்கையில் அனைத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் நடைபெறவிருந்த பல தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தாகவும் தெரிவித்தார்.