கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!
| | | |

கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!

இத்தாலி நாட்டுக்கு சொந்தமான கொஸ்டா டெலிசியோசா(Costa Deliziosa) என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் ஊடாக பிரித்தானியா , ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(15)வருகை தந்துள்ளனர். அவர்கள் காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலாவில் ஈடுபடுவதாகவும் மேலும் இந்த பயணிகள் கப்பல் மாலைதீவு நோக்கி செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் ஜப்பானின் சனத்தொகை விகிதம் குறைந்தது!
| | | | |

மீண்டும் ஜப்பானின் சனத்தொகை விகிதம் குறைந்தது!

ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 0.48 வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது.உள்விவகார அமைச்சு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜப்பானில் தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டளவில் 47 சதவீதமாக அதிகரிக்கும் என ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மீண்டும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை – வஜிர எச்சரிக்கை..!
| | | | |

மீண்டும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை – வஜிர எச்சரிக்கை..!

வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணையை மீள செலுத்தும் முறையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாடுகளுக்கு தெரிவித்திருக்கிறார். அதனால் அந்த முறையை யாராவது மாற்றியமைக்க முயற்சித்தால் மீண்டும் நாங்கள் அனைவரும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என  பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அதனால் எமது நாட்டை சர்வதேச ரீதியில் மேலோங்கச்செய்ய ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதே நாட்டு மக்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பாகுமென  தெரிவித்துள்ளார். இன்று சில அரசியல் தலைவர்கள் பல்வேறு விடயங்களை தெரிவித்தாலும்…

ஜப்பானில் பூகம்பம்..!
| | | |

ஜப்பானில் பூகம்பம்..!

ஜப்பானில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. புகுசிமா பிராந்தியத்தில்  40 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக ஜப்பானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தலைநகர் டோக்கியோவிலும் இப்பூகம்பம் உணரப்பட்டது.  எனினும், இப்பூகம்பத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவிலலை.

தாய்வானில் சக்திவாய்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை..!
| | | | |

தாய்வானில் சக்திவாய்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை..!

தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில்  கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்வானின் மத்திய வானிலை நிர்வாகம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. வடக்கு கடலோர பகுதியில் சுனாமி அலைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மியாகோஜிமா மற்றும் ஒகினாவா தீவுகளுக்கு சுனாமி…

இலவச வீசா திட்டம்..!
|

இலவச வீசா திட்டம்..!

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில்  குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:
| | | | | |

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவும் கோரிக்கைக்கு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று தென்கொரிய தமிழ்ச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று கொரியாவில் வசிக்கும் பல்லின சமூக குடும்பங்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஸ்யா, சீனா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாட்டை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்விற்கு தலைமை வகித்த கொரிய ஜனாதிபதியின் சமூக…

வெடித்து சிதறிய ஜப்பானிய ஏவுகணை..!
| | | | | |

வெடித்து சிதறிய ஜப்பானிய ஏவுகணை..!

ஜப்பானிய தனியார் நிறுவனமொன்றினால் இன்று ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவைத் தளமாக் கொண்ட ஸ்பேஸ் வன் (Space One) எனும் நிறுவனத்தின் Kairos எனும் ரொக்கெட், வாகாயாமா பிராந்தியத்திலுள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஏவுதளத்திலிருந்து இன்று காலை ஏவப்பட்டது. 18 மீற்றர் நீளம் கொண்ட இந்த ரொக்கெட்டில் ஜப்பானிய அரசின் சிறிய சோதனை செய்மதி ஒன்றும் ஏற்றப்பட்டடிருந்தது. செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய ஜப்பானின் முதல் தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் வன் (Space One)…

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!
| | | |

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். 56.7% கல்வி அறிவு கொண்டவர்களுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. முன்றாவது இடத்தினை ஜப்பான் பிடித்துள்ளதுடன் அங்கு 52.7% மான கல்வி கற்றவர்கள் காணப்படுகின்றனர். அதன்பின் நான்காவது இடத்தினை லக்சம்பர்க் பிடித்துள்ளதுடன் அந்நாட்டில் 51.3% படித்தவர்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது. மேலும் தென்கொரியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 50.1%வீதத்தில் ஆறாவது இடத்தில் சமநிலையில் உள்ளன….

ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி
| | | | |

ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் இன்றைய தினம் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கமைய இன்றைய தினம் 2 காலிறுதிப்போட்டிகளும் நாளைய தினம் 2 காலிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இன்றைய நாளின் முதலாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகள் மோதுகின்றனர். இப் போட்டி மாலை 05 மணியளவில் அஹமட் பின் அலி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும்   தென் கொரியா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப் போட்டி இன்று…