தென்னிந்திய நகைச்சுவை நடிகர் காலமானார்..!
| | | |

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் காலமானார்..!

தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தென்னிந்திய நடிகர் சேசு மாரடைப்பால் நேற்றைய தினம் (26) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமாகியுள்ளார். மேலும் இவர்  திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தில் சேசுவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 15ஆம் திகதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.