தென்னிந்திய நகைச்சுவை நடிகர் காலமானார்..!
| | | |

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் காலமானார்..!

தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தென்னிந்திய நடிகர் சேசு மாரடைப்பால் நேற்றைய தினம் (26) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமாகியுள்ளார். மேலும் இவர்  திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தில் சேசுவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 15ஆம் திகதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தலையில் சிக்கிய பாத்திரம்..!
| | | | |

தலையில் சிக்கிய பாத்திரம்..!

சென்னை போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை  அகற்றிய சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. குழந்தை  வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவுவோ முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை. பின்னர்  இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு வெட்டியெடுத்து குழந்தையை…

IPL இன் புதிய மாற்றங்கள்..!
| | | |

IPL இன் புதிய மாற்றங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இன்னும் சில நிமிடங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐபிஎல் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் இவ்வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் புதிய மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இவ்வருட ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் இரு பவுன்சர்கள் வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல்..!
| | | |

இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல்..!

சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இன்றையதினம் சென்னையிலிருந்து காலை  இலங்கை நோக்கி புறப்படும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. அத்துடன் தமிழக அரசு சாந்தனின் பூதவுடலை கொண்டு செல்வதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு மட்டுமே வழங்கியுள்ளதுடன்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் சாந்தனின் குடும்பத்தாரால் ஒழுங்கு செய்யப்ப்ட்டுள்ளதென வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் நினைவிடத்தில் சாணக்கியன்
| | |

விஜயகாந்தின் நினைவிடத்தில் சாணக்கியன்

தென்னிந்திய நடிகர் மற்றும் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் (13.01.2024) சாணக்கியன் நேரில் சென்றுள்ளார். கோவிட் தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28ஆம் திகதி (28.12.2023) காலமானார். தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், ரசிகர்கள்…

சபரி மலை சென்ற யாழ். ஐயப்ப பக்தர் உயிரிழப்பு
| | |

சபரி மலை சென்ற யாழ். ஐயப்ப பக்தர் உயிரிழப்பு

சபரி மலைக்கு செல்வதற்காக  விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் நேற்றைய தினம் (11) உயிரிழந்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த வேளை திடீரென உடல்நல குறைப்பாடு ஏற்பட்டது.   அது தொடர்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது , விமானம் தரையிறங்கியதும் தயராக இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது…

கெப்டன் விஜயகாந்த் காலமானார்!
| | | |

கெப்டன் விஜயகாந்த் காலமானார்!

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார். மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இனிக்கும் இளமை எனும் படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரி திரைப்படம் வரை முதன்மை கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். மேலும் இவர் 100 வது படமான கெப்டன்…

யாழில். தறையிறங்காமல் திரும்பிய விமானம்..!
| | | | |

யாழில். தறையிறங்காமல் திரும்பிய விமானம்..!

சென்னையில் இருந்து இன்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாத நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிஆவினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திலும் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானமே இவ்வாறு தரையிறக்க முடியாமல் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது.

சென்னையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடை
| | | |

சென்னையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடை

சென்னையில் மிக்ஜம் சூறாவளி பாதிப்பு மற்றும் பெய்த கடும் மழை காரணமாக வீதிகள், தண்டவாளங்கள், விமான நிலையம் என சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், விமானங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விமான சேவைகள் தமதமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புனேயிலிருந்து சென்னை வந்து சேர வேண்டிய விமானங்கள் தாமதமாகியதுடன், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதித்தே புறப்பட்டன. மோசமான காலநிலையினால் அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்ததால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி, ரயில்…